நடிகர் சூர்யா என் பார்வையில் : நடிகர் சூர்யா 7 ஆம் அறிவு படத்தில் தமிழர்களை உலக்குக்கு கட்டுகிறார்,தமிழை பெருமை கொள்ள செய்கிறார் ,தமிழன் என்று சட்டை காலரை தூக்கி சொல்ல வைத்து இருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள் சில அறிவிலிகள். ஒரு தமிழனாக உண்மை தமிழனாக தமிழ் பேரை சொல்லி பணம் சம்பாதிக்கும் சில மடையர்களை கண்டித்தே தீர வேண்டும் என்று நான் இந்த பதிவை எழுதுகிறேன் .
இந்த பதிவை நான் 7 ஆம் அறிவு வெளியான சமயத்தில் எழுதி இருந்தால் என்னை விஜய் ரசிகன் என்றும் அதனால் சூர்யாவை பழிக்கிறேன் என்று என்னை சபித்திருப்பார்கள்.நான்' விஜய் ரசிகன் என்றாலும் ,தமிழ் படம் எது வந்தாலும் பார்க்கும் ஒரு சினிமா ரசிகன் பின்பு தான் நான் விஜய் ரசிகன்.
சரி நான் சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன் .சூர்யா தமிழ் உணர்வாளன் ,அவர் 7 ஆம் அறிவை தமிழர்களுக்காக இந்த படத்தை எடுத்து இருந்தார் என்றால் என் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் .
கேள்வி- 01 -தமிழ் மக்களை கொன்று ஒழித்த ராஜபக்சே அவரின் ஆட்சி நிலவும் இலங்கை மண்ணில் நடந்த IIFA விழாவுக்கு செல்ல வேண்டாம் என்று சொன்ன போது அமிதாபச்சன் ,ஐஸ்வர்யா ராய்,அபிஷேக் பச்சன் ,மணிரத்னம் போன்ற இந்திய சினிமாவின் புகழ் பூத்த நடிகர்கள் எல்லாம் அந்த விழாவை புறக்கணித்தார்கள் .ஆனால் விவேக் ஓபராய் போன்ற சில நடிகர்கள் அந்த விழாவுக்கு சென்றார்கள் .இருந்த போதும் அதிகளவு நட்சந்திரங்கள் இல்லாமல் அந்த விழா தோல்வியில் முடிந்தது வேறு கதை.
அந்த சமயத்தில் அந்த விழாவிற்கு சென்று வந்த விவேக் ஓபராயுடன் இணைந்து சூர்யா ரத்த சரித்திரம் படத்தில் நடித்தார் .அப்போது எங்கே போனது சூர்யாவின் தமிழ் உணர்வு .சரி இலங்கை சென்று வந்த அசினுடன் விஜய் காவலன் படத்தில் இணைந்து நடித்தாரே அது தவறு இல்லையா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது
என் கோவம் சூர்யா விவேக் ஓபராயுடன் இணைந்து நடித்தது தவறு இல்லை .அவ்வாறு அவர் நடித்தது தவறு என்று தமிழின பாதுகாப்பு இயக்கம், நாம் தமிழர் இயக்கம் ஒரு அறிக்கை வெளியிட்டு அந்த படத்தை வெளியிட விட மாட்டோம் என்று அறிக்கை விட்டார்கள் ,அதற்கு சூர்யா அளித்த பதிலின் தரவுகளை நான் ஆதரங்களோடு காட்டுகிறேன் ,
http://tamilcinema.com/CINENEWS/Hotnehttp://tamilcinema.com/CINENEWS/
Hotnews/2010/may/290510.aspws/2010/june/240610d.asp
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/may/290510.asp

"தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?"
"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களேஞ் என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன். நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?" விவேக் ஓபராய் கட்டிய பாடசாலையின் பெயரை எங்களுக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா? திரு சூர்யா அவர்களே .....நடிகர்கள் கூத்தடிக்க வரவில்லை உதவ வந்தார்கள் என்றால்,IIFA விழா முடிந்ததும் விவேக் இலங்கை வரவே இல்லையே ?அப்படி விவேக் உதவ இலங்கை வந்து இருந்தால் சூர்யாவும் வந்து இருக்கலாம் தானே ? அவர் தான் உதவுவதில் வல்லவேரே ?
இந்த ஒரு பத்தி தான் சூர்யா என்ற நபரை நான் வெறுக்க காரணம் தன்மானம் உள்ள எந்த ஒரு தமிழனும் சூர்யாவை தலையில் வைத்து ஆட மாட்டார்கள் ,ரத்தசரித்தரம் வெளியான போது அவர் ஹிந்தி ரசிகர்களை கவர்ந்து அந்த படத்தை ஓட்ட நினைத்தார் இப்பொழுது தமிழன் பேரை சொல்லி 7 அறிவை ஓட்ட நினைக்கிறார் ...ஆனால் நான் இந்த படத்தை முருகதாசுக்காக,போதி தர்மருக்காக தியேட்டரில் போய் பார்த்தேன்,
மானமுள்ள ஆரறிவு உள்ள ஒரு தமிழன்
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/july/210710.asp http://tamilcinema.com/CINENEWS/Hotnehttp://tamilcinema.com/CINENEWS/
Hotnews/2010/may/290510.aspws/2010/june/240610d.asp
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/may/290510.asp