தேசிய விருது பெற்ற தமிழ் பாடல்களில் முதலிடம் பெறுவது

Monday, November 7, 2011

நடிகர் சூர்யா உண்மை முகம் --உண்மையின் மறுபக்கம்

நடிகர் சூர்யா என் பார்வையில் : நடிகர் சூர்யா 7 ஆம் அறிவு படத்தில் தமிழர்களை உலக்குக்கு கட்டுகிறார்,தமிழை பெருமை கொள்ள செய்கிறார் ,தமிழன் என்று சட்டை காலரை தூக்கி சொல்ல வைத்து இருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள் சில அறிவிலிகள். ஒரு தமிழனாக உண்மை தமிழனாக தமிழ் பேரை சொல்லி பணம் சம்பாதிக்கும் சில மடையர்களை கண்டித்தே தீர வேண்டும் என்று நான் இந்த பதிவை எழுதுகிறேன் .
இந்த பதிவை நான் 7  ஆம் அறிவு வெளியான சமயத்தில் எழுதி இருந்தால் என்னை விஜய் ரசிகன் என்றும் அதனால் சூர்யாவை பழிக்கிறேன் என்று என்னை சபித்திருப்பார்கள்.நான்' விஜய் ரசிகன் என்றாலும் ,தமிழ் படம் எது வந்தாலும் பார்க்கும் ஒரு சினிமா ரசிகன் பின்பு தான் நான் விஜய் ரசிகன்.

சரி நான் சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன் .சூர்யா தமிழ் உணர்வாளன் ,அவர் 7  ஆம் அறிவை தமிழர்களுக்காக இந்த படத்தை எடுத்து இருந்தார் என்றால் என் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் .

கேள்வி- 01 -தமிழ் மக்களை கொன்று ஒழித்த ராஜபக்சே அவரின் ஆட்சி நிலவும் இலங்கை மண்ணில் நடந்த IIFA விழாவுக்கு செல்ல வேண்டாம் என்று சொன்ன போது அமிதாபச்சன் ,ஐஸ்வர்யா ராய்,அபிஷேக் பச்சன் ,மணிரத்னம் போன்ற இந்திய சினிமாவின் புகழ் பூத்த நடிகர்கள் எல்லாம் அந்த விழாவை புறக்கணித்தார்கள் .ஆனால் விவேக் ஓபராய் போன்ற சில நடிகர்கள் அந்த விழாவுக்கு சென்றார்கள் .இருந்த போதும் அதிகளவு நட்சந்திரங்கள் இல்லாமல்  அந்த விழா தோல்வியில் முடிந்தது வேறு கதை.
அந்த சமயத்தில் அந்த விழாவிற்கு சென்று வந்த விவேக் ஓபராயுடன் இணைந்து சூர்யா ரத்த சரித்திரம் படத்தில் நடித்தார் .அப்போது எங்கே போனது சூர்யாவின் தமிழ் உணர்வு .சரி இலங்கை சென்று வந்த அசினுடன் விஜய் காவலன் படத்தில் இணைந்து நடித்தாரே அது தவறு இல்லையா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது
என் கோவம் சூர்யா விவேக் ஓபராயுடன் இணைந்து நடித்தது தவறு இல்லை .அவ்வாறு அவர் நடித்தது தவறு என்று தமிழின பாதுகாப்பு இயக்கம், நாம் தமிழர் இயக்கம் ஒரு அறிக்கை வெளியிட்டு அந்த படத்தை வெளியிட விட மாட்டோம் என்று அறிக்கை விட்டார்கள் ,அதற்கு சூர்யா அளித்த பதிலின் தரவுகளை நான் ஆதரங்களோடு காட்டுகிறேன் ,
"தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?"
"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களேஞ் என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன். நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?" விவேக் ஓபராய் கட்டிய பாடசாலையின் பெயரை எங்களுக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா? திரு சூர்யா அவர்களே .....நடிகர்கள் கூத்தடிக்க வரவில்லை உதவ வந்தார்கள் என்றால்,IIFA  விழா முடிந்ததும் விவேக் இலங்கை வரவே இல்லையே ?அப்படி விவேக் உதவ இலங்கை வந்து இருந்தால் சூர்யாவும் வந்து இருக்கலாம் தானே ? அவர் தான் உதவுவதில் வல்லவேரே ?
இந்த ஒரு பத்தி தான் சூர்யா என்ற நபரை நான் வெறுக்க காரணம் தன்மானம் உள்ள எந்த ஒரு தமிழனும் சூர்யாவை தலையில் வைத்து ஆட மாட்டார்கள் ,ரத்தசரித்தரம் வெளியான போது அவர் ஹிந்தி ரசிகர்களை கவர்ந்து அந்த படத்தை ஓட்ட நினைத்தார் இப்பொழுது தமிழன் பேரை சொல்லி 7 அறிவை ஓட்ட நினைக்கிறார் ...ஆனால் நான் இந்த படத்தை முருகதாசுக்காக,போதி தர்மருக்காக  தியேட்டரில் போய் பார்த்தேன்,
மானமுள்ள  ஆரறிவு உள்ள ஒரு தமிழன்
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/july/210710.asp
http://tamilcinema.com/CINENEWS/Hotnehttp://tamilcinema.com/CINENEWS/
Hotnews/2010/may/290510.aspws/2010/june/240610d.asp
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/may/290510.asp



Tuesday, April 26, 2011

"கோ" விமர்சனம்

ஹாய் நண்பர்களே எனக்கு ஜீவா நடித்த கோ படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது .நான் நடிகர் ஜீவாவின் ரசிகன் அல்ல ஆனால்,அந்த படம் பார்த்த பிறகு இந்த பதிவை எழுதும் அளவிற்க்கு எனக்கு இந்த படம் பிடித்திருக்கிறது இல்லை இல்லை,என்னோடு படம் பார்த்த அனைவருக்கும் பிடித்திருந்தது.எனக்கு FACEBOOK , வலைத்தளத்தில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சிம்பு இந்த படத்தில் நடிக்காதது ரொம்ப நல்லது மொக்கை படம் என்று கூறி இருந்தார்கள் .அதன் பின்பு தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.தியேட்டர் உள்ளே நானும் இதே சிந்தனையுடன் தான் சென்றேன் ஆனால் படம் பார்த்த பின்பு அந்த எண்ணம் சுக்கு நூறாக உடைந்து போனது .கொஞ்சம் காதல் ,கொஞ்சம் மோதல்,சிரிக்க சில இடங்கள் .ரசிக்க பல இடங்கள் ,என்று ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்த கே.வி .ஆனந்துக்கு ஒரு சலாம் போடலாம்.படத்தின் நாயகன் ஜீவா அலட்டல் இல்லாமல் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளார் என்றே கூறவேண்டும்,படம் பார்த்த பின்பு சிம்பு நடிக்காதது ரொம்ப நல்லது என்று தோன்றியது ,சிம்பு ரசிகர்கள் மன்னிக்க வேண்டும்.அடுத்ததாக  கார்த்திகா இதை சொல்லியே ஆகா வேண்டும் சிம்பு இந்த படத்தில் தமன்னாவை நாயகியாக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் அதை கே.வி.ஆனந்த் மறுக்கவே சிம்பு இதிலிருந்து விலகிக் கொண்டார் .தமன்னா இந்த படத்தில் நடித்திருந்தால் அழகாக நடிக்க கூடிய, பார்வையாலே ரசிகர்களை சொக்க வைக்க கூடிய, கார்த்திகா என்ற நடிகை தமிழ் சினிமா உலகிற்க்கு கிடைத்திருக்க மாட்டார்.அம்மாவை விஞ்சும் அழகு நடிப்பும் தான். ஆனால் நடனம் தான் வரவில்லை,அடுத்த கொஞ்ச வருடங்கள் இவரும் தமிழ் சினிமா உலகை வளம் வருவது அதுவும் வெற்றியோடு என்பது திண்ணம்.
அஜ்மல் அபார நடிப்பை அஞ்சாதேவில் காட்டினார்.அதில் துளிகூட மாற்றம் இல்லாமல் இந்த படத்திலும் அசத்தி இருக்கிறார்.திறமையான ஒரு நடிகரை தமிழ் சினிமா பயன் படுத்தாமல் இருக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது.அது போல் பியாவும் நடித்த படங்களில் எல்லாம் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்பட்ட போதிலும் அவரின் திறமையும் கவர்ச்சிக்காகவே பயன்படுகிறது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்  தான் காமெடி செய்ய வேண்டிய ஜெகன் அரசியல் செய்து கொஞ்சம் சீரியஸ் நடிப்பை வெளிப்படுத்த காமெடி செய்ய வேண்டிய பொறுப்பை பியா தன் கையில் எடுத்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.சோனாவின் நடிப்பு பிரமாதம் என்றே சொல்ல வேண்டும் .அதிலும் அவர் மக்களிடம் ஓட்டு[....] கேட்கும் நகைச்சுவை இந்த வருடத்தின் டாக் ஒப் தி டவுன் ஆக இருக்கும் இந்த "கோ' படத்தை போலவே
வில்லனாக வரும் கோட்டா சீனிவாசராவ் பயமுறுத்தி இருக்கிறாரா இல்லை சிரிக்க வைத்து இருக்கிறாரா என்று தியேட்டரில் பாருங்கள் .பிரகாஷ் ராஜ் வில்லனா? என்ற கேள்விக்கான பதிலும் 
தியேட்டரிலையே கிடைக்கும் .சூரியா,கார்த்தி,ஜெயம்ரவி.ஜெய். அப்பாஸ்,அதரவா,பரத்,சிவா,சசிகுமார்,ஜோன் விஜய்,ஷக்தி வாசு,ஹாரிஸ்ஜெயராஜ்,கிரீஸ்,தமன்னா,அனுஜா அய்யர்,மதன் கார்கி ,ரீமா கல்லிங்கள்,சஞ்சனா சிங் ஆகியோரின் பங்கும் இந்த படத்தில் இருந்தது சிறப்பு என்றே சொல்ல வேண்டும் அதிலும் கார்த்தி தமனாவின் நடனமும் கூட
ஹாரிஸ்ஜெயராஜின் இசையில் என்னமோ ஏதோ மற்றும் அக நக பாடலும் கேட்கும் ரகம்,மற்றவை சுமார் ரகம்.ரிச்சர்ட் எம் .நாதனின் ஒளிப்பதிவு பாராட்ட கூடியது ஆஹா ஹோஹோ என்று புகழக் கூடியது அல்ல.என்டனியின் எடிடிங் சூப்பர்.இந்த படம் ‘STATE OF PLAY' என்ற ஆங்கில படத்தின் கொப்பி என்றாலும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் திரைகதை எழுதிய கே.வி.ஆனந்த் மற்றும் சுபா ஆகியோர் பாராடட்ட தக்கவர்களே.அற்புதமான ஒரு திரில்லிங் அனுபவத்தை பெற கண்டிப்பாக தியேட்டரில் சென்று இந்த திரைப்படத்தை பாருங்கள் நான் சொல்லும் இந்த தகவல்களை நீங்களும் சொல்வீர்கள் என்று அடுத்த சுவாரஸ்யமான பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்போடு
கலை

Wednesday, April 20, 2011

தேசிய விருது பெற்ற பாடகர்கள்

தேசிய விருது பெற்ற பாடல்கள்
57 வது தேசிய விருது
பாடகர் -ரூபம் இஸ்லாம் - பெங்காலி [படம் -தாரே சாமின் பார் -பாடல்-மா ]
பாடகி -நிலஞ்சனா சர்க்கார் -பெங்காலி [படம் -தாரே சாமின் பார் -பாடல்-மா ]

56 வது தேசிய விருது
பாடகர் -ஹரிஹரன் -மராத்தி [படம் -ஜோக்வா -பாடல்-ஜீவ தங்கலா ]
பாடகி -ஸ்ரேயா கோசல்-பெங்காலி,மராத்தி [படம் -ஜோக்வா -பாடல்-ஜீவ தங்கலா ]

55 வது தேசிய விருது
பாடகர் -ஷங்கர் மகாதேவன்-ஹிந்தி [படம் -தாரே சாமின் பார் -பாடல்-மா ]
பாடகி -  ஸ்ரேயா கோசல் ஹிந்தி [படம் -ஜப் வி மெட்-பாடல்-யே இஸ்க் ஹாயே]

54 வது தேசிய விருது
பாடகர் -குர்தாஸ் மான் [படம் -வாரிஸ் சாஹ் இசாக் டா வாரிஸ் -பாடல்-கப்ல்]
பாடகி -  ஆரத்திஅங்களிக்கர் [படம் -அந்தர்நாத் -பாடல்-ஆல் ]


 




Monday, April 18, 2011

அறிந்து கொள்வோம் உலகை


சினிமா துணுக்குகள் 


முதல் திரைப்படங்கள் 

நடிகர்கள்

எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி
சிவாஜி - பராசக்தி
ஜெமினிகணேசன் - ஒளவையார்
எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி
முத்துராமன் - அரசிளங்குமரி
ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண்
சிவகுமார் - காக்கும் கரங்கள்
ஜெய்சங்கர் - இரவும் பகலும்
ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை
விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி
ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள்
கமலஹாசன் - களத்து£ர் கண்ணம்மா
விஜயகாந்த் - இனிக்கும் இளமை
சத்யராஜ் - சட்டம் என் கையில்
பாக்யராஜ் - 16 வயதினிலே
கார்த்திக் - அலைகள் ஒய்வதில்லை
பிரபு - சங்கிலி
முரளி - பூவிலங்கு (தமிழில்)
ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு
பார்த்திபன் - தாவணிக்கனவுகள்
அர்ஜூன் - நன்றி
சரத்குமார் - கண் சிமிட்டும் நேரம்
விக்ரம் - தந்துவிட்டேன் என்னை
பிரசாந்த் - வைகாசி பொறந்தாச்சி
அஜீத் - அமராவதி
விஜய் - நாளைய தீர்ப்பு
பிரபுதேவா - இதயம்
அரவிந்தசாமி - தளபதி
அருண்குமார் - பிரியம்பரத் : பாய்ஸ்
விஷால் : செல்லமே
சிபிராஜ் : ஸ்டுடண்ட் நம்பர் 1
ஸ்ரீகாந்த் : ரோஜாகூட்டம்
எஸ்.ஜே.சூர்யா : நியூ
ஜீவன் : யுனிவர்சிட்டி
பிரித்விராஜ் : கனா கண்டேன்
ஜெய் : பகவதி
சசிகுமார் : சுப்ரமணியபுரம்
பிரகாஷ் ராஜ் : டூயட்
ராஜ்கிரண் : என் ராசாவின் மனசிலே
கார்த்தி : பருத்திவீரன்
அப்பாஸ் - காதல் தேசம்
குணால் - காதலர் தினம்
சூர்யா - நேருக்கு நேர்
ஷாம் - 12பி
மாதவன் - அலைபாயுதே
ஸ்ரீகாந்த் - ரோஜாக்கூட்டம்
தனுஷ் - துள்ளவதோ இளமை
சிலம்பரசன் - காதல் அழிவதில்லை
பாலா- அன்பு
ரவி - ஜெயம்
நரேஷ் - குறும்பு
ஆரியன் ராஜேஸ் - ஆல்பம்
வினித் - ஆவாரம்பூ
விக்னேஷ் - சின்னத்தாயி
வடிவேலு - என் ராசாவின் மனசிலே
தங்கவேலு - சதி லீலாவதி
சுரேஷ் - பன்னீர் புஷ்பங்கள்
மோகன் - நெஞ்சத்தை கிள்ளாதே
ராமாராஜன் - நம்ம ஊரு நல்ல ஊரு
ராதாரவி - தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
காத்தாடி ராமுர்த்தி - பெண்ணே நீ வாழ்க
கரண் - அண்ணாமலை
வையாபுரி - மாணிக்கம்
ஆனந்த பாபு - உயிருள்ளவரை உஷா
ரஞ்சித் - சிந்துநதிப் பூ
நெப்போலியன் - புது நெல்லு புது நாத்து

நடிகைகள்
அசின் : உள்ளம் கேட்குமே
நயன்தாரா : ஐயா
சந்தியா : காதல்
தமன்னா : கேடி
ப்ரியாமணி : கண்களால் கைது செய்
பூஜா : உள்ளம் கேட்குமே
நமிதா : எங்கள் அண்ணா
ஸ்ரேயா : எனக்கு 20 உனக்கு 18
சதா : ஜெயராம்
பாவனா : சித்திரம் பேசுதடி
சிம்ரன் : விஐபி
த்ரிஷா : லேசா லேசா
பூமிகா : பத்ரி
சங்கவி : அமராவதி
விஜயலக்ஷ்மி : சென்னை-28
மீனா - நெஞ்சங்கள்
குஷ்பு - வருஷம் 16
ரோஜா - செம்பருத்தி
மதுபாலா - அழகன்
ரேஷ்மா - மாங்கல்யம் தந்துனானே
சங்கீதா - பவுர்னமி நிலவில்
வினிதா - ஊழியன்
ரம்பா - உழவன்
நக்மா - காதலன்(தமிழ்)
கனகா - கரகாட்டக்காரன்
சங்கவி - அமராவதி
தேவயானி - தொட்டாச்சிணுங்கி
சுவலட்சுமி - ஆசை
மந்த்ரா - பிரியம்
சுவாதி - தேவா
மனோரமா - மாலையிட்ட மங்கை
கோவை சரளா - முந்தானை முடிச்சி
சாவித்ரி - பாதாள பைரவி
பத்மினி - கல்பனா
சரோஜாதேவி - தங்கமலை ரகசியம்
சௌகார் ஜானகி - வளையாபதி
கே,ஆர்விஜயா - தங்க ரத்தினம்
ஜெயலலிதா - வெண்ணிற ஆடை
வைஜெயந்தி மாலா - வாழ்க்கை
வாணிஸ்ரீ - காதல் படுத்தும் பாடு
ஜெயந்தி - அன்னை இல்லம்
நிர்மலா - வெண்ணிற ஆடை
லட்சுமி - ஜீவனாம்சம்
பி.பானுமதி - நல்லதம்பி(தமிழில்)
ஜெயசித்ரா - குறத்தி மகன்(தமிழில்)
சுஜாதா - அவள் ஒரு தொடர்கதை
ஸ்ரீப்ரியா - முருகன் காட்டிய வழி
ஜெயசுதா - பெத்த மனம் பித்து
ஸ்ரீதேவி - துணைவன்
மஞ்சுளா - சாந்தி நிலையம்
லதா - உலகம் சுற்றும் வாலிபன்
கவிதா - ஓ மஞ்சு
சரிதா - தப்பு தாளங்கள்
மாதவி - புதிய தோரணங்கள்
அம்பிகா - தரையில் வாழம் மீன்கள்
ரசிகா - பகவத்சிங்
ராதா - அலைகள் ஒய்வதில்லை
ராதிகா - கிழக்கே போகும் ரயில்
விஜயசாந்தி - கல்லுக்குள் ஈரம்
ரேவதி - மண்வாசனை
ஊர்வசி - முந்தானை முடிச்சி
ஷோபனா - எனக்குள் ஒருவன்
பானுப்பிரியா - மெல்லப்பேசுங்கள்
ப்ரீத்தா விஜயகுமார் - தர்மா
ஸ்ரீவித்யா - திருவருட்செல்வர்
கீதா - பைரவி
அமலா - மைதிலி என்னை காதலி
நளினி - ராணுவவீரன்
சீதா - ஆண்பாவம்
கவுதமி - குரு சிஷ்யன்
கஸ்து£ரி - ஆத்தா உன் கோயிலிலே
சுகன்யா-புது நெல்லு புது நாத்து
ஹீரா - இதயம்
விந்தியா-சங்கமம்
ஜெயமாலினி - சக்களத்தி
அஞ்சலிதேவி - ரம்பா மேனகா
ரதி - புதிய வார்ப்புகள்
ரஞ்சனி - முதல் மரியாதை
சிவரஞ்சனி - மனசார வாழ்த்துங்களேன்
சாந்திகிருஷ்ணா - பன்னீர் புஷ்பங்கள்
சுஹாசினி - நெஞ்சத்தை கிள்ளாதே
சிம்ரன் - பூச்சூடவா
இந்து - இளவரசி
சோனியா - மை டியர் குட்டிச்சாத்தான்
ஜூஹிசாவ்லா - பருவராகம்
சுஷ்மிதா சென் - ரட்சகன்
ஐஸ்வர்யா ராய் - இருவர்
விஜி - கோழிகூவுது
பிந்துகோஷ் - கோழிகூவுது
சுபாஸ்ரீ - எங்க தம்பி
நீனா - நாயகன்
சௌந்தர்யா - பொன்னுமணி
ஜோதிகா - வாலி
மாளவிகா - உன்னைத்தேடி
கவுசல்யா - காலமெல்லாம் காதல் வாழ்க
இஷாகோபிகர் - காதல் கவிதை
மும்தாஜ் - மோனிஷா என் மோனாலிசா
ஸ்ருதி - கல்கி
ஸ்ருதிகா-ஆல்பம்
லைலா - ரோஜாவனம்
சிலுக் ஸ்மிதா - வண்டிச்சக்கரம்
ரஞ்சிதா - நாடோடி தென்றல்
ஈஸ்வரி ராவ் - கவிதை பாடும் அலைகள்
சினேகா - விரும்புகிறேன்
மோகினி - ஈரமான ரோஜாவே