ஹாய் நண்பர்களே எனக்கு ஜீவா நடித்த கோ படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது .நான் நடிகர் ஜீவாவின் ரசிகன் அல்ல ஆனால்,அந்த படம் பார்த்த பிறகு இந்த பதிவை எழுதும் அளவிற்க்கு எனக்கு இந்த படம் பிடித்திருக்கிறது இல்லை இல்லை,என்னோடு படம் பார்த்த அனைவருக்கும் பிடித்திருந்தது.எனக்கு FACEBOOK , வலைத்தளத்தில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சிம்பு இந்த படத்தில் நடிக்காதது ரொம்ப நல்லது மொக்கை படம் என்று கூறி இருந்தார்கள் .அதன் பின்பு தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.தியேட்டர் உள்ளே நானும் இதே சிந்தனையுடன் தான் சென்றேன் ஆனால் படம் பார்த்த பின்பு அந்த எண்ணம் சுக்கு நூறாக உடைந்து போனது .கொஞ்சம் காதல் ,கொஞ்சம் மோதல்,சிரிக்க சில இடங்கள் .ரசிக்க பல இடங்கள் ,என்று ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்த கே.வி .ஆனந்துக்கு ஒரு சலாம் போடலாம்.படத்தின் நாயகன் ஜீவா அலட்டல் இல்லாமல் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளார் என்றே கூறவேண்டும்,படம் பார்த்த பின்பு சிம்பு நடிக்காதது ரொம்ப நல்லது என்று தோன்றியது ,சிம்பு ரசிகர்கள் மன்னிக்க வேண்டும்.அடுத்ததாக கார்த்திகா இதை சொல்லியே ஆகா வேண்டும் சிம்பு இந்த படத்தில் தமன்னாவை நாயகியாக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் அதை கே.வி.ஆனந்த் மறுக்கவே சிம்பு இதிலிருந்து விலகிக் கொண்டார் .தமன்னா இந்த படத்தில் நடித்திருந்தால் அழகாக நடிக்க கூடிய, பார்வையாலே ரசிகர்களை சொக்க வைக்க கூடிய, கார்த்திகா என்ற நடிகை தமிழ் சினிமா உலகிற்க்கு கிடைத்திருக்க மாட்டார்.அம்மாவை விஞ்சும் அழகு நடிப்பும் தான். ஆனால் நடனம் தான் வரவில்லை,அடுத்த கொஞ்ச வருடங்கள் இவரும் தமிழ் சினிமா உலகை வளம் வருவது அதுவும் வெற்றியோடு என்பது திண்ணம்.
அஜ்மல் அபார நடிப்பை அஞ்சாதேவில் காட்டினார்.அதில் துளிகூட மாற்றம் இல்லாமல் இந்த படத்திலும் அசத்தி இருக்கிறார்.திறமையான ஒரு நடிகரை தமிழ் சினிமா பயன் படுத்தாமல் இருக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது.அது போல் பியாவும் நடித்த படங்களில் எல்லாம் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்பட்ட போதிலும் அவரின் திறமையும் கவர்ச்சிக்காகவே பயன்படுகிறது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் காமெடி செய்ய வேண்டிய ஜெகன் அரசியல் செய்து கொஞ்சம் சீரியஸ் நடிப்பை வெளிப்படுத்த காமெடி செய்ய வேண்டிய பொறுப்பை பியா தன் கையில் எடுத்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.சோனாவின் நடிப்பு பிரமாதம் என்றே சொல்ல வேண்டும் .அதிலும் அவர் மக்களிடம் ஓட்டு[....] கேட்கும் நகைச்சுவை இந்த வருடத்தின் டாக் ஒப் தி டவுன் ஆக இருக்கும் இந்த "கோ' படத்தை போலவே
வில்லனாக வரும் கோட்டா சீனிவாசராவ் பயமுறுத்தி இருக்கிறாரா இல்லை சிரிக்க வைத்து இருக்கிறாரா என்று தியேட்டரில் பாருங்கள் .பிரகாஷ் ராஜ் வில்லனா? என்ற கேள்விக்கான பதிலும்
தியேட்டரிலையே கிடைக்கும் .சூரியா,கார்த்தி,ஜெயம்ரவி.ஜெய். அப்பாஸ்,அதரவா,பரத்,சிவா,சசிகுமார்,ஜோன் விஜய்,ஷக்தி வாசு,ஹாரிஸ்ஜெயராஜ்,கிரீஸ்,தமன்னா,அனுஜா அய்யர்,மதன் கார்கி ,ரீமா கல்லிங்கள்,சஞ்சனா சிங் ஆகியோரின் பங்கும் இந்த படத்தில் இருந்தது சிறப்பு என்றே சொல்ல வேண்டும் அதிலும் கார்த்தி தமனாவின் நடனமும் கூட
ஹாரிஸ்ஜெயராஜின் இசையில் என்னமோ ஏதோ மற்றும் அக நக பாடலும் கேட்கும் ரகம்,மற்றவை சுமார் ரகம்.ரிச்சர்ட் எம் .நாதனின் ஒளிப்பதிவு பாராட்ட கூடியது ஆஹா ஹோஹோ என்று புகழக் கூடியது அல்ல.என்டனியின் எடிடிங் சூப்பர்.இந்த படம் ‘STATE OF PLAY' என்ற ஆங்கில படத்தின் கொப்பி என்றாலும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் திரைகதை எழுதிய கே.வி.ஆனந்த் மற்றும் சுபா ஆகியோர் பாராடட்ட தக்கவர்களே.அற்புதமான ஒரு திரில்லிங் அனுபவத்தை பெற கண்டிப்பாக தியேட்டரில் சென்று இந்த திரைப்படத்தை பாருங்கள் நான் சொல்லும் இந்த தகவல்களை நீங்களும் சொல்வீர்கள் என்று அடுத்த சுவாரஸ்யமான பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்போடுகலை

No comments:
Post a Comment